கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
பெண்ணாடம்: கழுத்தில் கத்தி.. 16 வயது சிறுமியை நடுரோட்டில் பதறவைத்த இளைஞர்.. பரபரப்பு சம்பவம்.!

பள்ளியில் படிக்கும் சிறுமியிடம் பழகி வந்த இளைஞர், அவருக்கு நடுரோட்டில் தாலி கட்ட முற்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம், மேல்இருளம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் ராமசாமி. இவரின் மகன் கார்த்திகேயன் (வயது 34). இதே பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார்.
இதையும் படிங்க: 14 வயது சிறுமி கர்ப்பம்; திருமணமான 26 வயது நபரின் அதிர்ச்சி செயல்.. போக்ஸோவில் உள்ளே வைத்த காவல்துறை.!
சிறுமியுடன் பழக்கத்தை ஏற்படுத்திய கார்த்திகேயன், ஒருகட்டத்தில் அதனை காதலாக மாறி இருக்கிறார். இதனிடையே, சம்பவத்தன்று மாணவி சாலையில் நடந்து சென்றுகொண்டு இருந்தார்.
நடுரோட்டில் அதிர்ச்சி சம்பவம்
அப்போது, மாணவியின் கழுத்தில் தாலி கட்ட முயற்சித்து இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிடவே, அவரை கத்தி முனையில் தாலி கட்ட முற்பட்டுள்ளார். இதனைக்கண்ட கிராம மக்கள் இளைஞரை தடுத்துள்ளனர்.
பின் சர்ச்சை செயலில் ஈடுபட்ட கார்த்திகேயனை பெண்ணாடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த விஷயம் குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில், அதிகாரிகள் போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர்.
இதையும் படிங்க: கடலூர்: வரதட்சணை எங்க? திருமணமான 2 ஆண்டுகளில் பெண் தற்கொலை.. கணவரின் தொந்தரவால் சோகம்.!