திருச்சி மாவட்டத்தில் தீண்டாமை கொடுமை ... பட்டியலின மக்களுக்கு எதிராக தொடரும் அராஜகம்.!cruelty-of-untouchability-in-trichy-district-anarchy-co

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே  பட்டியலின மக்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக  கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும்   மாற்று சமூகத்தைச் சார்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள கலர்பட்டி என்னும் கிராமத்தைச் சார்ந்த பட்டியலின பெண் வேறொரு சமூகத்தைச் சார்ந்த ஆண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு சமூகத்திற்கும் இடையே கடந்த மூன்று மாதங்களாகவே பிரச்சனை இருந்து வருகிறது.

tamilnadu

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள முருகன் கோவில் ஒன்றில் பட்டியலின மக்கள் வழிபாடு செய்து வந்திருக்கின்றனர். அந்தக் கோவிலை மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இடித்திருக்கின்றனர். மேலும் பட்டியலின மக்களிடம் வரி வசூல் செய்யாமல் அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களை ஊரை காலி செய்யுமாறும் கொலை மிரட்ட நொடித்ததாக கூறப்படுகிறது

அதுமட்டுமில்லாமல் பட்டியலின மக்களை அவர்களது சமுதாயத்தை பேரைச் சொல்லி இழிவாக பேசி வருவதாகவும் பட்டியலின மக்கள் தெரிவித்தனர்  இதனைத் தொடர்ந்து மாற்று சமுதாயத்தைச் சார்ந்த மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மருங்காபுரி வட்டாட்சியர் மற்றும் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.