கொடுமையிலும் கொடுமை... மகளுக்கு பாலியல் தொல்லை தந்த கொடூர தந்தை...!

கொடுமையிலும் கொடுமை... மகளுக்கு பாலியல் தொல்லை தந்த கொடூர தந்தை...!


cruelty-and-cruelty-cruel-father-who-sexually-harassed

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 54 வயதுடைய கூலி தொழிலாளி தனது மகளுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துளார்.

இதனையடுத்து ராஜபாளையம் பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. மேலும் புகாரின் பேரில்  விசாரணை நடத்திய போலீசார் கூலி தொழிலாளியை  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Sexual Harrasment

இதனைத்தொடர்ந்து சமீபத்தில் வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றம் அந்தக் கூலி தொழிலாளிக்கு ரூ.1000 அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.