தமிழகம்

பாத்திரத்தை பக்கத்துல கொண்டு போனாலே லிட்டர் கணக்கில் பால் கறக்கும் அதிசய பசுமாடு..! வைரல் வீடியோ...!

Summary:

Cow giving automatic milk video goes viral

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பசுமாடு ஒன்று பாத்திரத்தை கீழே வைத்தாலே அதுவாகவே பால் கறக்கும் ஆச்சரியமான சம்பவம் ஒன்று நடந்துவருகிறது.

கடலூர் மாவட்டம் திருமாணிகுழி என்ற கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். வீட்டில் சில பசுமாடுகளை வளர்த்துவருகிறார் மணிகண்டன். இந்நிலையில் இவர் வளர்ந்துவரும் பசு ஒன்று கடந்த சில வாரங்களுக்கு முன் புதிதாக கன்று ஒன்றை ஈன்றுள்ளது. பசு கன்று ஈன்றிய நாளில் இருந்து பாத்திரத்தை அருகில் கொண்டுபோனாலே அதுவாகவே பாத்திரத்தில் பாலை கறந்துவிடுகிறது.

இப்படி தினமும் காலையிலும், மாலையிலும் பாத்திரத்தை அருகில் கொண்டுசென்றாளே ஒரு லிட்டர் வரை அந்த பசு பால் கறக்கிறதாம். ஒரு காம்பில் கன்றுக்குட்டி பால் குடித்துக்கொண்டிருந்தாலும், மற்றொரு காம்பின் அருகில் பாத்திரத்தை காட்டினாலும் பசு பால் கறக்கிறது.

இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் தீயாக பரவியதை அடுத்து பலரும் அந்த மாட்டை ஆச்சரியத்துடனும், வியப்புடனும் பார்த்துவருகின்றனர். அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள்.


Advertisement