சரிவான பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்; 7 குழந்தைகள் பலி, 30 பேர் படுகாயம்.. பதறவைக்கும் வீடியோ.!Kyrgyzstan 30 Children Injured 7 Died Truck rammed Into Children 


கிரிகிஸ்தான் நாட்டில் உள்ள சுழக் மாகாணத்தில், மே 2ம் தேசிய அளவிலான விடுமுறை நாளில் பள்ளி குழந்தைகளை வைத்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. 

அந்த நிகழ்ச்சியில், குழந்தைகள் தங்களின் கைகளில் அந்நாட்டின் ப்ரம்மாண்டமான தேசிய கொடியை வைத்திருந்தனர். 

இந்நிலையில், குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் விற்பனை செய்ய பள்ளத்தாக்கின் சரிவு பகுதியில் ஐஸ்கிரீம் விற்பனை வாகனம் ஒன்று வந்து நின்றது. இந்த வாகனம் பள்ளத்தாக்கில் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. 

இதனால் சரிவான புல்வெளிப்பகுதியில் அமர்ந்து இருந்த மாணவர்களின் மீது ஏறி - இறங்கிய வாகனம் தறிகெட்டு ஓடியது. 

நொடியில் நடந்த துயரத்தில் 30 மாணவ - மாணவியர்கள் படுகாயமடைந்தனர். மேலும், 7 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 

விபத்து குறித்த பதைபதைப்பு காட்சிகள் டிரோன் கேமிராவில் எதற்ச்சையாக படமாக்கப்பட்டது. தற்போது வீடியோ வைரலாகி வருகிறது.