மசாலா பொருட்களில் பூச்சிக்கொல்லியா? - இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் முக்கிய தகவல்..! 



Indian Food Safety Department about Masala Products 

 

இந்தியாவில் உள்ள மசாலா உற்பத்தி நிறுவனங்கள், தங்களின் தயாரிப்பு பொருட்களில் இந்திய உணவு மற்றும் பாதுகாப்புத்துறையின் அறிவுரைப்படி, தனது தயாரிப்புகளை பல ஆண்டுகளுக்கு பாதுகாக்க பூச்சிக்கொல்லியை குறிப்பிட்ட அளவு கலக்கிறது. 

தற்போது பூச்சிக்கொல்லி அளவை 10 மடங்கு அதிகரிக்க மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டதாக பல செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இவ்விவகாரத்திற்கு விளக்கம் அளித்துள்ள உணவு மற்றும் பாதுகாப்புத்துறை, 

"இந்திய மசாலா பொருட்களில் கலக்கப்படும் பூச்சிக்கொல்லி அளவை அதிகரிக்க உத்தரவிட்டதாக வெளியான தகவல் தவறானது. உலகளவில் அதிகபட்சமாக நிர்ணயிக்கப்படும் அளவு முறையை இந்தியாவும் பின்பற்றுகிறது" என தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்திய மசாலாவில் எத்திலீன் ஆக்சைட் பூச்சிக்கொல்லி அதிகம் இருப்பதாக சில நாடுகள் அவற்றின் இறக்குமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.