அதிர்ச்சியில் உறையும் கோவை மக்கள்.. கலர் கலராக மாறிய நீர்.!



covai-rain-water-mixed-with-factory-drainage

நேற்று இரவு கோயமுத்தூரில் பலத்த மழை பெய்ததால், அந்த மழை நீரோடு, சாயப்பட்டறையிலிருந்த கழிவுகளும் சேர்ந்துள்ளது. இதனால், ஆற்று பாலம் சுண்ணாம்பு காளவாயில், தண்ணீர் போகும் வழியில் நுரை பெருக்கெடுத்து ஓடியது.

Covaiஇதன் காரணமாக பல மீட்டர் தூரத்திற்கு நுரை வெண்ணிறத்தில் தேங்கி நின்றது. இதனை பொதுமக்கள் வேடிக்கை பார்த்தபடி சென்றுள்ளனர். இதற்கு நடுவே, இன்று காலை 8 மணிவரையில் கோவையில், பெய்த மழையின் அளவை அந்த மாவட்ட நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.

Covai

கோவை மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில், வேளாண்மை பல்கலைக்கழகம் பகுதியில், 5.2 சென்டிமீட்டர்,  தொண்டாமுத்தூரில் 5.9 சென்டிமீட்டர்,  கோவை தெற்கு பகுதியில் 5.6 சென்டிமீட்டர், கோவை பீளமேடு பகுதியில் 6.1 சென்டிமீட்டர் என்ற அளவுகளில் மழை பெய்துள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. அதேபோல, காலைவேளையில் வானம் மேகமூட்டத்தோடு காணப்படுவதுடன், குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.