தமிழகம்

அட பாதகத்தி நீயும் பெண் தானே... மாயமான பச்சிளம் குழந்தை.! ஆட்டோ டிரைவர் கொடுத்த தகவலால் மீட்கப்பட்ட குழந்தை.!

Summary:

அட பாதகத்தி நீயும் பெண் தானே... மாயமான பச்சிளம் குழந்தை.! ஆட்டோ டிரைவர் கொடுத்த தகவலால் மீட்கப்பட்ட குழந்தை.!

ராணிப்பேட்டை மாவட்டம் மேல் பவழந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவரின் மனைவி சுஜாதா பிரசவத்திற்க்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் கடந்த 8- ஆம் தேதி சுஜாதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இந்தநிலையில், மருத்துவமனை படுக்கையில் குழந்தை தூங்கிக்கொண்டிருந்த நிலையில், சுஜாதாவை அவரது மாமியார் கழிவறைக்கு அழைத்துச்சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது குழந்தையை படுக்கையில் காணவில்லை. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் மருத்துவமனை முழுவதும் தேடியுள்ளனர்.

இதனையடுத்து குழந்தையின் உறவினர்கள் மருத்துவமணிக்கு வெளியே நின்றுகொண்டிருந்த ஆட்டோ டிரைவரிடம் விசாரித்த போது, இப்போதுதான் குழந்தையுடன் ஒரு தம்பதியை காஞ்சீபுரம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு வருகிறேன் என்று கூறினார். உடனடியாக அதே ஆட்டோவில் போலீசாரின் உதவியுடன் அந்த பேருந்து நிலையத்துக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு சுஜாதாவின் குழந்தையுடன் ஒரு தம்பதி நின்று கொண்டிருந்தனர். உடனடியாக அந்த தம்பதியை மடக்கி பிடித்து அவர்களிடமிருந்த பச்சிளம் குழந்தையை மீட்டனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அந்த தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், குழந்தையை கடத்தியதாக தெரிவித்தனர். இதனையடுத்து கணவன்-மனைவி இருவரையும் கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement