தமிழகம்

கொரோனா நிவாரணம் 1000 ரூபாய் பணம், இலவச ரேஷன் பொருட்கள் எப்போது கிடைக்கும்.? தமிழக அரசு அறிவிப்பு.!

Summary:

Corono relief fund will be settled from April 2 to 15

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசும், அணைத்து மாநில அரசுகளும் தீவிர முயற்சி எடுத்துவருகிறது.

இதன் ஒருபகுதியாக மார்ச் 31 வரை தமிழக முழுவதும் 144 தடை உத்தரவை தமிழக முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதனிடையே 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே போகவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் 1000 ரூபாய் பணமும், ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் சமீபத்தில் அறிவித்திருந்தார். தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, இந்த பொருட்கள் அனைத்தும் வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் 15ம் தேதிக்குள் விநியோகிக்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement