தமிழகம் Covid-19

கொரோனாவால் இறந்த சென்னை டாக்டர் சைமனின் கடைசி ஆசை இதுதான்..! கண்ணீர்விட்டு கதறிய மனைவி.! ஏற்குமா அரசு.? வைரல் வீடியோ.!

Summary:

Corono chennai doctor last wish video

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் ஊரடங்கு காரணமாக தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பால் இறந்துபோன சென்னையை சேர்ந்த டாக்டர் சைமனின் உடலை புதைக்க விடாமல் மக்கள் போராட்டம் நடத்தினர். இந்தநிலையில் தற்போது அவரது மனைவி கதறிய படி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், எனது கணவரின் கடைசி ஆசையே, அவரை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையில் புதைக்கவேண்டும் என்பதுதான். எனவே, தமிழக முதல்வர் தயவு செய்து தங்கள் குடும்பத்திற்கு உதவி செய்து எனது கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்றவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதோ அந்த வீடியோ.


Advertisement