தமிழகம்

தமிழகத்தில் கோரதாண்டவமாடும் கொரோனா! கிடுகிடுவென உயரும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை!

Summary:

Corono affected people in tamilnadu

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 190 க்கு மேற்பட்ட உலகநாடுகளில்  அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த கொடூர கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவிய நிலையில் இதுவரையில் 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர். 

 இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கவும் தொடர்ந்து சமூகவிலகலை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனோவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571 ஆக இருந்த நிலையில் தற்போது மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் சென்னையில் மட்டும் 110 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


Advertisement