தமிழகத்தில் தொடர் உச்சத்தில் கொரோனா: இன்றும் மட்டும் இவ்வளவு பாதிப்பு மற்றும் இறப்பு!

Corona virus latest news and updates in Tamil Nadu


Corona virus latest news and updates in Tamil Nadu

தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக  5,791 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் படவா தொடங்கியதிலிருந்து அன்றாட நிலவரம் மற்றும் பாதிப்பு எண்ணிக்கை குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை அன்றாடம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியான அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக  5,791 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona updates

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 808 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 80 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை 9313 ஆக அதிகரித்துள்ளது.

இன்று சற்று ஆறுதலாக இன்று மட்டும் தமிழகத்தில் 5706 பேர் கொரோன பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 25 ஆயிரத்து 154 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.