தமிழகம் Covid-19

தமிழகத்தில் தலைவிரித்தாடும் கொரோனா..! இன்று ஒரே நாளில் 119 பேர் மரணம்.! பாதிப்பு எவ்வளவு தெரியுமா.?

Summary:

Corona today Tamil Nadu update

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,880 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேமாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. கடந்த பல நாட்களாக தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.

அந்த வகையில் இன்றும் மட்டும் தமிழகத்தில் புதிதாக 5,880 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,85,024 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 119 பேர் உயிரிழந்தநிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4690 ஆக உயர்ந்துள்ளது.

சற்று ஆறுதலாக தமிழகத்தில் இன்று மட்டும்  6488 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் 2,27,575 பேர் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


Advertisement