தமிழகம்

கொரோனா விழிப்புணர்வுக்கு இப்படி ஒரு பாடலா! அடேய்.! எல்லை மீறி போறீங்கடா என கதறும் நெட்டிசன்கள்!

Summary:

corona song

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி, உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்நோய் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. மேலும் மக்கள் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர். 

இந்தநிலையில், தமிழக மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமாய் செயல்பட்டு வருகிறது. கொரோனா குறித்து வதந்தியை பரப்பி பொதுமக்களை அச்சப்படுத்தவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கொரோனா விழிப்புணர்வுக்காக சமூகவலைத்தளத்தில் இருவர் பாடிய பாடல் ஒன்று வைரலாகி வருகிறது. தில்லானா.. தில்லானா.. நீ தித்திக்கின்ற தேனா... என்ற பாடலை மாற்றி கொரோனா.. கொரோனா... என பாடி இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவிற்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்டுகளும் வந்தவண்ணம் உள்ளது.


Advertisement