தமிழக மக்களே ரெடியா.? கொரோனா நிவாரண நிதியுதவி.! வீடு தேடி வரும் டோக்கன்.!

தமிழக மக்களே ரெடியா.? கொரோனா நிவாரண நிதியுதவி.! வீடு தேடி வரும் டோக்கன்.!



corona relief fund

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதனையடுத்து தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றவுடன் மு.க ஸ்டாலின் பல முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். முதலாவதாக கொரோனா நிவாரணமாக குடும்பத்துக்கு ரூ.4000 நிதியுதவி, ஆவின் பால்விலை லிட்டருக்கு ரூ3 குறைப்பு உள்ளிட்ட கோப்புகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

அதில், 2 கோடியே 7 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு முக்கிய இடம் பெற்றிருந்தது. நிவாரண நிதி ரூ.4 ஆயிரத்தில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் இந்த மாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (10.05.2021) நண்பகல் 12 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கிறார். 

corona

வருகிற 15-ந்தேதி முதல் சென்னை உள்பட அனைத்து மாவட்ட ரேசன் கடைகளிலும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் வேகமெடுத்து உள்ளதால், ரேசன் கடைகளில் கூட்டம் சேரக்கூடாது என்பதற்காக வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கி, அதன் அடிப்படையில் தினமும் 200 பேருக்கு ரூ.2 ஆயிரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்று முதல் டோக்கன் வழங்கும் பணியும் வீடு வீடாக தொடங்க இருக்கிறது. ரேசன் கடை பணியாளர்களே இன்று முதல் 3 நாட்கள், ரேசன் கார்டு எண் அடிப்படையில் டோக்கன் வழங்க இருக்கின்றனர். 

அந்த டோக்கனில், ரேசன் கடையின் எண், பெயர், அட்டைதாரர் பெயர், கிராமம், தெரு, நிவாரண நிதி வழங்கும் தேதி, நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. டோக்கன் எண்ணை குறிப்பிடுவதற்கு தனியாக காலமும் ஒதுக்கப்பட்டுள்ளது. முதலில் டோக்கன் வழங்கும் பணிகள் வரும் 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதனையடுத்து வரும் 15-ந்தேதி முதல் ரேசன் கடைகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை சமூக இடைவெளியுடன் டோக்கன் அடிப்படையில் மட்டுமே ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.