நேற்று மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா பரிசோதனை.! வெளியானது பரிசோதனை முடிவு.!

நேற்று மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா பரிசோதனை.! வெளியானது பரிசோதனை முடிவு.!


corona negative to MK stalin

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.  நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 கொரோனாவால் பொதுமக்கள் மட்டும் இல்லாமல் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். இந்தநிலையில், களத்தில் பணியாற்றும் நபர்களுக்கும் கொரோனா உறுதியாகி வந்தது. 

கொரோனா தொற்றால் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்தநிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மேலிடப் பொறுப்பாளர்  தினேஷ் குண்டுராவ்க்கு கோரோனோ உறுதிசெய்யப்பட்டுள்ளது.

MK Stalin

 தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மேலிடப் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்  கடந்த 25ஆம் தேதி சென்னைக்கு வருகை தந்தார். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம், உள்ளிட்ட பல்வேறு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவர் இரண்டு தினங்களுக்கு முன்பு திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார். அவருடன் திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே என் நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

தினேஷ் குண்டுராவ் கொரோனா அறிகுறி தென்பட்டதால், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா இல்லை என தெரிய வந்துள்ளது.