துக்க நிகழ்ச்சிகளில் இப்படியொரு கேவலமான செயலா.? பிஹைண்ட்வுட் சேனலின் அதிரடி அறிவிப்பு.!
மீண்டும் தமிழகத்தில் உச்சகட்டத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு.! அதிகரித்துவரும் பலி எண்ணிக்கை.!
மீண்டும் தமிழகத்தில் உச்சகட்டத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு.! அதிகரித்துவரும் பலி எண்ணிக்கை.!

ஆரம்பத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா வைரஸ் சமீப காலமாக குறைந்து வந்த நிலையில், தற்போது கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
தமிழகத்திலும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக இன்று புதிதாக 10,941 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில், தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,02,392 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 44 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,157 ஆக அதிகரித்துள்ளது.