தமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா பாதிப்பு! பலி எண்ணிக்கை அதிகரிப்பு!
தமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா பாதிப்பு! பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் இன்று மேலும் 4,965 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,80,643 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 1,130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 88,377 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 75 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,626 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 4,894 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,26,670 ஆக உயர்ந்துள்ளது.