தமிழகம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்காவது இருக்கிறதா?வெளியிட்டார் சுகாதாரத்துறை செயலாளர்!

Summary:

corona in tamilnadu

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது உலகளவில் மக்களிடையே பெரும்பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் தினமும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை சீனாவில் 12,000 பேருக்கு மேல் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. மேலும் இதுவரை 12,000 பேருக்கு மேல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது.

பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் தமிழகம் வந்த 3,223 பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்றும் தெரிவித்தார்.
 


Advertisement--!>