தமிழகம்

கொரோனாவை தடுக்க தமிழக அரசின் தொடர் முயற்சி! 24 மணி நேரமும் இயங்கும் கால் சென்டர்..!

Summary:

Corona

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்த நோய் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதுவரை இந்நோயால் தமிழகத்தில் மட்டும் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்நோய் பரவுவதை தடுக்க தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதனால் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள், மால்கள் மற்றும் கடைகள் அடைக்கப்பட்டு விட்டன. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து எல்லைகளும் மூடப்பட்டு வாகனங்கள் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளன.

தற்போது புதிய முயற்சியாக கொரோனா குறித்த சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ள 24 மணி நேரமும் இயங்கும் கால் சென்டரினை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்துள்ளார். இந்த சென்டரானது 24 மணி நேரமும் மூன்று ஷிப்டுகளுடன் இயங்கும், மேலும் இதில் அனுபவமுள்ளவர்கள் பணியாற்றவுள்ளனர்.


Advertisement