கேப்டன் மகனின் படத்திற்கு வந்த சிக்கல்.! தள்ளிப்போன ரிலீஸ் தேதி.! என்ன காரணம்??
#Breaking: நீலகிரி வெடி மருந்து தொழிற்சாலையில் வெடிவிபத்து.. 2 பேர் காயம்; மருத்துவமனையில் அனுமதி.!

மத்திய அரசுக்கு சொந்தமான வெடி மருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அருவன்காடில் மத்திய அரசுக்கு சொந்தமான வெடி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் வெடி மருந்துகள் இந்தியா முழுவதும் இராணுவ தளவாடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை வழக்கம்போல தொழிற்சாலையில் பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கும்போது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வேணுகோபால், ஜெயபால், ஜெபஸ்டின் ஆகியோர் காயமடைந்தனர்.
இவர்கள் உடனடியாக அவசர ஊர்தி உதவியுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வெடி சத்தம் கேட்டு உள்ளூர் மக்கள் முதலில் பீதியடைந்த நிலையில், தொழிற்சாலை நிர்வாகத்தின் அறிவிப்புக்கு பின்னர் நிம்மதியடைந்தனர்.