அடேங்கப்பா.. கூட்டுறவு வங்கிகளுக்கு அசத்தல் அறிவிப்பு.. இந்தியாவிலேயே முதன்முறை IMPS முறை..!
தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப அரசும் தொடர்ந்து பல புதுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களுக்கான பல தரவுகளை எளிமையாக கிடைக்க வழிவகை செய்கிறது. தமிழகத்தில் கூட்டுறவு வங்கி கிராமப்புறங்களில் பிரதானமாக விவசாயிகளால் உபயோகிக்கப்படும் வங்கிகளில் முக்கியமானதாகும்.
இந்த நிலையில், அனைத்து தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் இனி பணபரிவர்த்தனை IMPS முறையில் அறிமுகம் செய்யப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அடுத்த 2 வாரத்தில் புதிய பணவர்த்தனை வசதியுடன் UPI வசதியும் கொண்டுவரப்பட்டு இனி கூட்டுறவு வங்கிகளுக்கு Gpay, Paytm, BHIM மூலமாகவும் பணம் அனுப்பலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது இந்தியாவிலேயே முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.