கடை திறப்பு விழாவிற்கு வந்த 'குக் வித் கோமாளி' புகழ்.! கடை திறந்த அடுத்த நிமிடமே கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்.!

கடை திறப்பு விழாவிற்கு வந்த 'குக் வித் கோமாளி' புகழ்.! கடை திறந்த அடுத்த நிமிடமே கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்.!


cook-with-komali-pugazh-went-to-mobile-shop-opening-cer

திருநெல்வேலி மாவட்டத்தில் செல்போன் கடை ஒன்றின் திறப்பு விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக 'குக் வித் கோமாளி' பிரபலம்  புகழ் சென்ற நிலையில், அவரைப் பார்க்கக் கூட்டம் கூடியதால் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. தமிழகத்தில் கொரானா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலும் கொரானா வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் திருநெல்வேலி மாவட்டத்தில் 200 க்கும் மேற்பட்டோர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும்  கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரபேட்டை பகுதியில் புதிய செல்போன் கடை  திறப்பு விழாவுக்கு நேற்று விஜய் டிவியின் குத்வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலம் புகழ் வருகை தந்திருந்தார். அவரை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் கடை முன்பு திரண்டு இருந்தனர். ரசிகர்கள் பலர் புகழுடன் செல்பி எடுத்துக் கொள்ளவும் முயன்றனர். ஆனால் அங்கிருந்த ரசிகர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் முக கவசம் அணியாமலும் கூடியிருந்தனர். 

Cook with komaliஇதனைத் தொடர்ந்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கடையை வந்து பார்வையிட்டு கொரோனா விதிகளை மீறியதாக கூறி கடைக்கு சீல் வைத்தனர். மேலும் கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தனர். புதிய செல்போன் கடை  திறப்பு விழா அன்றே கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்ததால், கடையின் உரிமையாளர்கள் சோகத்தில் மூழ்கினர்.