தொடர் கனமழையால் நிலைகுலைந்து போன நீலகிரி மாவட்டம்..
தொடர் கனமழையால் நிலைகுலைந்து போன நீலகிரி மாவட்டம்..

இந்தியாவில் மும்பை மாநகரில் கனமழை பெய்தது போலவே தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. கூடலூரின் பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்
மேலும் நீலகிரியில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. தொடர் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.