அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு.!

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு.!


confusions-in-paying-salaries-through-the-website-will


தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு இணையதளம் மூலம் சம்பளம் வழங்குவதற்குத் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்திருக்கிறது அதிமுக அரசு. ஆனால், சம்பளப் பட்டியலை இணையதளத்தில் ஏற்றுவதில் ஒவ்வொரு மாதமும் குழப்பம் நீடிக்கிறது.  இந்தநிலையில், திமுக ஆட்சியில் குழப்பங்கள் களையப்பட்டு, குறித்த தேதியில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், அரசு ஊழியர்களுக்கான சம்பளப் பட்டியலை இணையதளத்தில் ஏற்றுவதில் ஒவ்வொரு மாதமும் குழப்பம் உள்ளதாக புகார் கூறியுள்ளார்.


இரு ஆண்டுகளில் ஒரு மாதம் கூட குறித்த நேரத்தில் சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், பல இடங்களில் பிப்ரவரி மாதச் சம்பளமே வழங்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். அடுத்து அமையப்போகும் திமுக ஆட்சியில் இக்குழப்பங்கள் களையப்பட்டு குறித்த தேதியில் சம்பளம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.