சொத்து தகராறில் இரு தரப்பினரிடையே மோதல்: ஒருவர் பரிதாப பலி 3 பெண் உட்பட 5 பேர் மீது வழக்கு..!

சொத்து தகராறில் இரு தரப்பினரிடையே மோதல்: ஒருவர் பரிதாப பலி 3 பெண் உடபட 5 பேர் மீது வழக்கு..!


conflict-between-two-parties-in-a-property-dispute-is-a

ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டினம் அருகேயுள்ள அழகன் வயல் கிராமத்தை சேர்ந்தவர் ராசு. இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். உறவினர்களான சங்கர் மற்றும் ராசு ஆகிய இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.

சொத்து பிரிவினை குறித்து அவர்களுக்கிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று ராசு மற்றும் சங்கர் ஆகிய இருவரது குடும்பத்தினரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ராசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இரு குடும்பத்தினரிடையே நடந்த தகராறு குறித்து அக்கம்பக்கத்தினர் எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த ராசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து சங்கர், அவரது உறவினர் மதன் மற்றும் 3 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.