முதியவர் கொலையில் துப்பு துலங்கியது,.12 மணி நேரத்தில் சிக்கிய கொலையாளி! பரபரபூட்டும் பின்னணி..!

முதியவர் கொலையில் துப்பு துலங்கியது,.12 மணி நேரத்தில் சிக்கிய கொலையாளி! பரபரபூட்டும் பின்னணி..!


confessed to killing his father with a sickle because he refused to hand over the property

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகேயுள்ள நெற்கட்டும்செவல் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (62). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி காளியம்மாள் (55). மாடத்தி, முருகேஸ்வரி என்ற 2 மகள்களும், முத்துகுமார் என்ற மகனும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாண நிலையில் மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

கடந்த 15 வருடங்களாக கருப்பையா குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். அவரது மனைவி காளியம்மாள், மகன் முத்துக்குமாருடன் இலவங்குளம் கிராமத்தில் வசித்து வருகிறார். மகள் மாடத்தி, திருமணமாகி சங்கரன்கோவில் பகுதியில் வசித்து வருகிறார். மாடத்தி தான் தினமும் தந்தைக்கு காலை, மதியம் மற்றும் இரவு உணவு வழங்கி பராமரித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு பத்துமணி வரை கருப்பையா வீட்டின் வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். இன்று காலை வெகு நேரமாகியும் கதவு திறக்காததால், அருகிலுள்ள உறவினர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது உள்ளே கருப்பையா அரிவாளால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் புளியங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், கருப்பையாவுக்கும் அவரது மகனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததும். இது தொடர்பாக புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

பின்னர் முத்துகுமாரிடம் விசாரணை செய்ததில் தனக்கு சொத்து தர மறுத்ததால் கருப்பையாவை அரிவாளால் வெட்டி கொன்றதாக ஒப்பு கொண்டார். இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், கருப்பையாவின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.