தமிழகம் Covid-19

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா! களமிறங்கியது கமாண்டோ படை! மக்களே உஷார்!

Summary:

commandos force for corona relief

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் வீரியம் பெற்று வருகிறது. குறிப்பாக தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதன்காரணமாக சென்னை உள்பட 5 மாவட்டங்களில் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 1654 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 45,814ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பரவல் அதிகமுள்ள சென்னையில் வடசென்னை பகுதிகளில் மட்டுமே பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதற்கு அப்பகுதி மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும், அரசின் அறிவுரைகளை ஏற்காமல் அலட்சியமாக சுற்றி திரிவதுமே காரணமாக பார்க்கப்படுகிறது.

சென்னையில் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கமாண்டோ படை களமிறக்கப்பட்டுள்ளது. ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. ஆனாலும் மக்கள் நடமாட்டம் குறையவில்லை. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தும், அது அத்தனையும் பலனளிக்கவில்லை. இதனால் தற்போது கமாண்டோ படை களமிறக்கப்பட்டுள்ளது.

வடசென்னை பகுதியில் கமாண்டோ படை வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதால் இனி தேவையில்லாமல் சுற்றுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் மிகச்சிறந்த நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.


Advertisement