ஆத்தாடி என்னா அடி... தலை முடியை பிடித்து கொண்டு நடுரோட்டில் சண்டையிட்ட கல்லூரி மாணவிகள்.! என்ன காரணம்.?



college students fight on road

சென்னை அண்ணா நகரில் நேற்று தனியார் கல்லூரி மாணவிகள் இருவர் நடு ரோட்டில் தலைமுடியை பிடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். மாணவிகள் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து தாக்கிக்கொண்டதை இளைஞர்கள் மொபைலில் விடியோவாக பதிவு செய்தனர்.

சண்டையிட்ட மாணவிகளை சக மாணவிகள் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால், அந்த மாணவிகள் தொடர்ந்து சண்டையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவிகள் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்துக்கொண்டு சண்டையிடும்போது தடுக்க வந்த ஒரு மாணவியை மற்றொரு மாணவி அடித்து விரட்டியுள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இரு மாணவிகளுக்கிடையே நடந்த மோதல் சம்பவத்தால் இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் இரு மாணவிகளையும் அழைத்து விளக்கம் கேட்டுள்ளனர்.