மாணவியின் அழகில் மயங்கிய பேராசிரியர்.. என்கூட வந்து குடும்பம் நடத்து.. தில்லுமுல்லு செய்த பேராசிரியருக்கு மாணவி வைத்த செக்..



college-professor-threaten-girl-student-with-marriage-c

போலியாக திருமண சான்றிதழ் தயார் செய்து கல்லூரி மாணவியை பேராசிரியர் ஒருவர் மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரி ஒன்றின் விசுவல் கம்யூனிகேஷன் துறையில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருபவர் அய்யப்பன்தாங்கலை சேர்ந்த சதீஸ்குமார். இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் தனது வகுப்பில் பயிலும் மாணவி ஒருவர் மீது சதீஸ்குமார்க்கு காதல் ஏற்பட்டுள்ளது. தனது காதலை சதீஸ்குமார் அந்த மாணவியிடம் தெரிவித்து, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவி சதீஸ்குமார் உடன் பழகுவதை தவிர்த்து வந்துள்ளார்.

ஆனாலும் தனது காதலை விட்டுக்கொடுக்க முடியாமல் சதீஷ்குமார் தொடர்ந்து அந்த மாணவியிடம் தன்னை காதலிக்கும்படியும், திருமணம் செய்துகொள்ளும்படியும் தொல்லை கொடுத்துவந்துள்ளான். சதீஷ்க்கு ஏற்கனவே திருமணம் ஆனதையும், ஒரு குழந்தை இருப்பதையும் சுட்டிக்காட்டி அந்த மாணவி அவரை எச்சரித்துள்ளார்.

ஆனாலும் சதீஷ்குமார் மாணவியை தொல்லை செய்வதை நிறுத்தவில்லை. இதனை அடுத்து மாணவியின் கல்லூரி பேராசிரியர் என்ற போர்வையில் அந்த மாணவியின் பெற்றோரிடமும் சகஜமாக பேசி பழகி வந்துள்ளான். இப்படியே சென்றுகொண்டிருந்தநிலையில் தனது இச்சையை நிறைவேற்றிக் கொள்ள தில்லு முல்லு வேலையில் ஈடுபட்டுள்ளான் சதீஷ்குமார்.

மாணவியின் சான்றிதழ்களை திருடி, மாணவிக்கு தெரியாமல் தனக்கும் அவருக்கும் திருமணம் நடந்து முடிந்ததுபோல் போலியான திருமண சான்றிதழை தயார் செய்துள்ளான். பின்னர் அந்த திருமண சான்றிதழை அந்த மாணவியிடம் காண்பித்து, தன்னுடன் சேர்ந்து வாழும்படியும், இல்லையெனில் இந்த திருமண சான்றிதழை உனது பெற்றோருக்கு அனுப்பிவிடுவேன் என மிரட்டியுள்ளான்.

ஆனால் மாணவி அதற்கும் அடிபணியாததால் அந்த திருமண சான்றிதழை மாணவியின் பெற்றோர்க்கு அனுப்பியுள்ளான் சதீஷ்குமார். மேலும், தன்னுடன் சேர்ந்து வாழவில்லை என்றால் இந்த சான்றிதழ்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவேன் எனவும் மாணவிக்கு மிரட்டல் விடுத்துள்ளான்.

இதனால் பயந்துபோன அந்த மாணவி நடந்த சம்பவம் குறித்து தியாகராயர் நகர் துணை ஆணையரை சந்தித்து தனக்கு நடந்த கொடுமை குறித்து விவரித்துள்ளார். இதனை அடுத்து மாணவி கொடுத்த புகாரை அடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த சான்றிதல்கள் போலி என்பதை கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து கல்லூரி பேராசிரியர் சதீஷ்குமார் மீது போலியாக ஆவணங்களை தயாரித்தல், போலி ஆவணங்களின் மூலம் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கல்லூரி பேராசிரியர் ஒருவரே இதுபோன்ற காரியத்தில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.