வீட்டு பூட்டை உடைக்கல! ஆனால் பீரோவில் உள்ள ரூ.1.5 கோடி திருட்டு! மகளுடன் வெளியே சென்ற பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி!



coimbatore-velmurugan-money-theft

கோயம்புத்தூரில் நடந்த பெரும் திருட்டுச் சம்பவம் அப்பகுதியையே அதிரவைத்துள்ளது. வாடகை வீட்டில் இருந்த பெரும் தொகை பணம் கொள்ளை போனது குறித்து போலீசார் விரைவாக விசாரணை நடத்தி உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

பணத்தை வீட்டில் வைத்திருந்த பிரியா

கோயம்புத்தூர் மாவட்டம் பொங்காலியூரைச் சேர்ந்த பிரியா, தனது மகளுடன் வேல்முருகனின் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு, பிரியா தனது சொந்த நிலத்தை விற்று 1 கோடி 50 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றிருந்தார். அதில் 1.5 கோடி தொகையை வீட்டின் பீரோவில் வைத்திருந்தார்.

திரும்பியபோது அதிர்ச்சி

சம்பவம் நடந்த அன்று, பிரியா மகளுடன் வெளியே சென்று வீடு பூட்டி விட்டு வந்தார். திரும்பியபோது பீரோவில் இருந்த 1 கோடியே 20 லட்சம் ரூபாய் காணாமல் போனது தெரியவந்தது. உடனடியாக அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பூட்டை உடைக்காமல் சாவியை பயன்படுத்தி கொள்ளை நடந்திருப்பது சந்தேகத்தை கிளப்பியது.

இதையும் படிங்க: அட கொடுமையே... பணத்திற்காக சிறுமி கொலை.!! 15 வயது சிறுவன் வெறி செயல்.!!

கண்காணிப்பு கேமரா காட்சிகள் உண்மை வெளிப்படுத்தின

போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, வீட்டு உரிமையாளர் வேல்முருகன் மாற்று சாவியை பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைந்து பணத்தை எடுத்தது உறுதியாகியது. இதனைத் தொடர்ந்து வேல்முருகன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பணத்தை பறிமுதல் செய்த போலீசார்

கைது செய்யப்பட்ட வேல்முருகனிடம் இருந்த 1 கோடியே 20 லட்சம் ரூபாய் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் பொங்காலியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் வாடகை வீடுகளில் பாதுகாப்பு குறைபாடு மற்றும் நம்பிக்கைக்கு இடையிலான சிக்கல்களை வெளிப்படுத்துவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: இப்படி கூட பண்ணுவாங்களா... ஹோட்டல் முன் விலை உயர்ந்த பைக்கை திருடிய வாலிபர்! இறுதியில் பைக் ஓனருக்கு நடந்த இன்ப அதிர்ச்சி!