தமிழகம்

என் பிள்ளைகளை ஆபாசமா பேசி அடிக்கிறாரு.. வி.சி.க நிர்வாகியால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற தந்தை.!

Summary:

இடத்தகராறில் வி.சி.க நிர்வாகி செய்யும் கொடுமைகளால் 3 குழந்தைகளின் தந்தை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை செய்ய முயற்சித்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இடத்தகராறில் வி.சி.க நிர்வாகி செய்யும் கொடுமைகளால் 3 குழந்தைகளின் தந்தை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை செய்ய முயற்சித்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் பகுதியை சார்ந்தவர் அற்புதராஜ். இவர் அங்குள்ள தபால் அலுவலகத்தில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவரின் வீட்டருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜார்ஜ் குப்புசாமி வசித்து வருகிறார். அற்புதராஜுக்கும் - ஜார்ஜ் குப்புசாமிக்கும் இடையே இடப்பிரச்னை இருந்து வந்துள்ளது. 

இந்த இடத்தகராறு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஜார்ஜ் குப்புசாமி அவ்வப்போது அற்புதராஜுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், ஆபாசமாக பேசி தாக்கவும் செய்துள்ளார். அற்புதராஜுக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ள நிலையில், இவர்களை வி.சி.க நிர்வாகி ஜார்ஜ் குப்புசாமி ஆபாசமாக பேசி தாக்கி இருக்கிறார். 

இதுகுறித்து அற்புதராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பலமுறை புகார் அளித்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காத நிலையில், கடந்த 15 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அற்புதராஜ், இடப்பிரச்சனையில் நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இந்த மனு மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

இதனால் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகிய அற்புதராஜ், இன்று காலை அவரது மகள்கள் மற்றும் மகனுடன் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, கையில் வைத்திருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சித்துள்ளார். சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் அவரை காப்பாற்றி, விசாரணைக்கு அழைத்து சென்றனர். 

வி.சி.க நிர்வாகியின் கொடுமையால் 3 குழந்தைகளின் தந்தை தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement