கோவை: பெண்ணை கொலை செய்து தனியார் மருத்துவமனையில் உடல் உறுப்பு திருட்டு.. அதிர்ச்சி புகார்..!

கோவை: பெண்ணை கொலை செய்து தனியார் மருத்துவமனையில் உடல் உறுப்பு திருட்டு.. அதிர்ச்சி புகார்..!



Coimbatore private hospital organ theft

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரவீனா. இவர் நேற்று கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்தார்‌. இந்த புகாரில், எனது தாயாருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 

இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக கோவை சுந்தராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்தோம். அங்கு ஒரு மாதம் வரை எனது தாயார் சிகிச்சை பெற்ற நிலையில், அவரது உடல் நலம் குறித்து கேட்டதற்கு பதிலளித்த அளிக்காமல் ஒரு நாள் கட்டணமாக ரூபாய் 70 ஆயிரம் செலுத்த கூறினார்கள். 

இந்த நிலையில், கடந்த மே மாதம் மூன்றாம் தேதி எனது தாயை கிணத்துக்கடவு அருகே உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனது தாயுடன் சில நோயாளிகளும் சென்ற நிலையில், மறுநாள் எனது தாய் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். எனது தாயின் நகைகளும் மாயமாகி இருந்த நிலையில், இதுகுறித்து மருத்துவமனையில் பணியாற்றி வரும் சிலர் அவரது உடல் உறுப்புகள் திருடப்பட்டுள்ளதாக ரகசியமாக தகவல் தெரிவித்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போத்தனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொள்ளாமல் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆதரவாக பேசி, என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி என்னிடமிருந்த ஆதாரங்களையும் வாங்கி அழித்தனர். குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையில் உடல் உறுப்பு திருட்டு நடைபெறுவதாக ஏற்கனவே புகார் இருந்த நிலையில், காவல்துறையினரும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுகின்றனர். 

மேலும், உள்ளூர் சுகாதார துறையினரிடம் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. இதனால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் குறித்து விசாரணை நடத்தி, அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் காவல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று புகாரில் பெண்மணி தெரிவித்துள்ளார்.