தமிழகம்

வாட்ஸப்பில் பிளாக் செய்த காதலி.. தாயின் சேலையில் தன்னுயிரை பிளாக் செய்த பரிதாபம்.!

Summary:

வாட்ஸப்பில் பிளாக் செய்த காதலி.. தாயின் சேலையில் தன்னுயிரை பிளாக் செய்த பரிதாபம்.!

காதலித்த பெண்மணி தன்னை வாட்ஸப்பில் பிளாக் செய்ததால், காதலன் தனது தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பரிதாபம் நடந்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, காரியகாளியம்மன் கோவில் பகுதியை சார்ந்தவர் தண்டபாணி (வயது 49). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அஜய் (வயது 19). அஜய் உடுமலையில் செயல்பட்டு வரும் கல்லூரியில், 3 ஆம் வருடம் டிப்ளமோ பயின்று வந்துள்ளார். 

அஜய்க்கு கடந்த 3 வருடத்திற்கு முன்னதாக நண்பரின் மூலமாக புளியம்பட்டி பகுதியை சார்ந்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே, இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், அந்த இளம்பெண் வேறொரு நபரை காதலித்து வருவதாக அஜய்க்கு தகவல் தெரியவந்துள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக பெண்ணிடம் பேசிய நிலையில், அதுகுறித்து இளம்பெண் பேச மறுப்பு தெரிவித்து அஜயின் வாட்சப் எண்ணை பிளாக் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜய் பெண்ணின் வீட்டிற்கு நேரடியாக புறப்பட்டு சென்ற நிலையில், மீண்டும் வீட்டிற்கு வந்த அஜய் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

வீட்டிற்கு வந்த அஜயின் தந்தை மகனின் அறை கதவு திறக்கப்படாமல் இருப்பதை கண்டு சந்தேகமடைந்த நிலையில், வீட்டின் பின்புறம் வழியாக சென்று பார்க்கையில் அஜய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. அஜய் அவரது தாயின் சேலையில் தூக்கிட்டு தன்னுயிரை மாய்துள்ளார். 

பின்னர், இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Advertisement