கஞ்சா காதலனுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு... மணமகனின் விபரீத முடிவால் பகீர்..!!

கஞ்சா காதலனுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு... மணமகனின் விபரீத முடிவால் பகீர்..!!


Coimbatore Man Suicide

கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பட்டணம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன். இவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது 30). இவர் கஞ்சா போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதனால் மகனின் எதிர்காலம் குறித்த கேள்வி எழுந்துகொள்ளவே, பெற்றோர்கள் போதை மறுவாழ்வு மையத்தில் பாலகிருஷ்ணனை அனுமதித்துள்ளனர். 

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில், வீட்டிற்கு திரும்பிய சில நாட்களிலேயே மீண்டும் கஞ்சா பழக்கம் தொற்றிக்கொள்ள, இதனை கவனித்த பெற்றோர் மகனுக்கு ஒரு திருமணம் செய்து வைத்தால் அவன் நல்வழிப்படுவான் என்று எண்ணியுள்ளனர். இதற்காக அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்ய நிச்சயம் செய்யபட்டது. 

தனக்கு திருமணம் வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்த கோபாலகிருஷ்ணன், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திடீரென சென்னை செல்வதாக புறப்பட்டுச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து ஊர் திரும்பியவர், வீட்டில் தனிமையில் இருக்கும்போது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்‌. 

இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.