தென்னங்கள் குடிக்க சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி பலி: 6 பேர் அதிரடி கைது.!Coimbatore Man died Electric Attack

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூரை சேர்ந்தவர் துரைசாமி. இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில், தென்னை மர கள் இறக்கி விற்பனை செய்து வருகிறார். 

இவர் தனது தென்னந்தோப்பு பாதுகாப்புக்காக சட்டவிரோதமாக மின்வேலி அமைத்துக்கொண்டு கள் இறக்கி விற்பனை செய்வதாக தெரியவருகிறது. இந்த நிலையில், கடந்த 21 ம் தேதி கள் குடிக்க வந்த சுஜித் (வயது 22) என்ற இளைஞர் மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

Coimbatore

இதனையடுத்து, இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.