ஆபாச படம் பார்ப்பவரா நீங்கள்?... மோசடி கும்பலின் அடுத்த கைவரிசை அம்பலம்.. உஷார் மக்களே.!

ஆபாச படம் பார்ப்பவரா நீங்கள்?... மோசடி கும்பலின் அடுத்த கைவரிசை அம்பலம்.. உஷார் மக்களே.!


Coimbatore Man Cheated By Cyber Crime Gang Watching Porn Videos' 

 

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள ஆபாச படங்களை பார்த்தால், அது சட்டபூர்வமான குற்றமாக கருதப்படுகிறது. எனினும், அது சார்ந்த நடவடிக்கைகள் குறைந்தளவே எடுக்கப்படுகின்றது. 

சிறார் தொடர்பான ஆபாச வீடியோ பார்த்தல், பகிருதல் போன்றவை மட்டுமே தற்போதைய நிலையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் விஷயமாக இருக்கின்றன. 

சிலநேரம் ஆபாச படத்தை பார்ப்போரின் விபரத்தை சட்டவிரோத கும்பல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தெரிந்துகொண்டு, ஆபாச படம் பார்ப்போரை மிரட்டி பணம் பறிக்கும் சபவத்திலும் ஈடுபடுகிறது. 

பொதுவெளியில் விஷயம் தெரிந்தால் அவமானம் என்று கருதும் பலரும், இவ்வாறான கும்பலிடம் சிக்கி ஆயிரம் முதல் இலட்சக்கணக்கில் பணம் இழந்தும் வருகின்றனர். 

இந்நிலையில், கோவையை சேர்ந்த லாலா ராம் என்பவருக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், நீங்கள் தங்களின் செல்போனில் ஆபாச படம் பார்த்த புகார் வந்துள்ளது. இதனால் நீங்கள் கைது செய்யப்படலாம். 

வழக்கை முடித்துவைக்க ரூ.42 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என கூறி இருக்கின்றனர். பணத்தை கொடுத்த ராமிடம் தொடர்ந்து பணம் பறிக்க முயல, சுதாரித்த நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.