மனைவிக்கு தொடர்புகொண்ட கணவன்.. போனில் சொன்ன தகவலால், மனமுடைந்து தூக்கில் தொங்கிய சோகம்.!



Coimbatore Husband Suicide Police Investigation

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புளியகுளம், பெரியார் நகரில் வசித்து வருபவர் இளங்கோ (வயது 26). இவர் கல்லூரி படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டு, டார்னியர் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். 

இவரின் மனைவி வைஷ்ணவி. தம்பதிகளுக்கு 3 மாதமாகும் பெண் குழந்தை உள்ள நிலையில், அவரின் மனைவி கடந்த 17 ஆம் தேதி காரமடை தேர் திருவிழாவுக்காக சென்றுள்ளார். 

Coimbatore

மனைவிக்கு தொடர்பு கொண்டு பேசிய இளங்கோ, வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு மனைவி, நாளை காலை வருகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் இளங்கோவுக்கு மிகப்பெரிய மன வருத்தம் ஏற்பட்டதாக தெரியவருகிறது. 

மனம்நொந்துபோன இளங்கோ வாழ்க்கையில் விரக்தியடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த இராமநாதபுரம் காவல் துறையினர், இளங்கோவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.