தமிழகத்தை அதிரவைத்த கோவை மாணவி தற்கொலை வழக்கு.. 9 மாதங்கள் கழித்து பரபரப்பு சம்பவம்.. சிக்கிய 2 பேர்..!

தமிழகத்தை அதிரவைத்த கோவை மாணவி தற்கொலை வழக்கு.. 9 மாதங்கள் கழித்து பரபரப்பு சம்பவம்.. சிக்கிய 2 பேர்..!



coimbatore girl sexual harassment suicide issue

பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில் 9 மாத விசாரணைக்கு பின் மேலும் இரண்டு பேர் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவியான 17 வயது சிறுமி, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளாகி அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. 

மாணவியின் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், மாணவி பயின்று வந்த பள்ளியின் தாளாளர் மீரா ஜாக்சன் மற்றும் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி ஆகியோரை கைது செய்தனர். 

மிதுன் சக்கரவர்த்தி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில், இதனை பள்ளியின் தாளாளரான மீரா ஜாக்சனுக்கு மாணவி தெரியப்படுத்தியுள்ளார். ஆனால், பாலியல் தொல்லை தொடர்பான புகார் வந்தும் அவர் நடவடிக்கை எடுக்காமல் மிதுன் சக்கரவர்த்திக்கு ஒத்துழைத்ததால் மனதுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Coimbatore

தற்கொலை விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவர் எழுதிய கடிதமும் கைப்பற்றப்பட்டது. இதில், சிறுமி சிறுவயதிலிருந்து பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டது உறுதியானது. இந்நிலையில், ஒன்பது மாதங்கள் கழித்து 2 காம கொடூரர்களின் உண்மை முகம் வெளியாகி உள்ளன.

மாணவி எழுதிவைத்த குறிப்பின் பேரில் துப்பு துலக்கிய காவல்துறையினர், மாணவியின் வீட்டருகே வசித்து வரும் சுல்தான் என்ற நபரையும், மாணவியுடன் பயின்று வந்த தோழியின் தந்தை மனோராஜையும் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.