மாதம் ரூ.1 இலட்சம் சம்பளம்., ஆன்லைன் ரம்மியால் 3வது தற்கொலை முயற்சியில் உயிரிழந்த கோவை எஞ்சினியர்.. பதறவைக்கும் தகவல்.!

மாதம் ரூ.1 இலட்சம் சம்பளம்., ஆன்லைன் ரம்மியால் 3வது தற்கொலை முயற்சியில் உயிரிழந்த கோவை எஞ்சினியர்.. பதறவைக்கும் தகவல்.!



Coimbatore Engineer Suicide Loss MOney Online Rummy

ஆன்லைன் ரம்மி செயலுக்கு அடிமையான எஞ்சினியர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், காவல் துறையினரின் விசாரணையில் பேரதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர், உப்பிலிபாளையம் ஆர்.எல்.வி நகரில் வசித்து வருபவர் சங்கர் (வயது 29). இவர் என்ஜினியராக இருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான சங்கர், தனது நண்பர்களிடம் கடன் வாங்கி பணத்தை இழந்துள்ளார். 

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்தவர், கோயம்புத்தூர் ராம் நகரில் இருக்கும் தனியார் விடுதியில் அறையெடுத்து தங்கி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக காட்டூர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சங்கர் தற்கொலைக்கு முன்பு எழுதியிருந்த கடிதம் கைப்பற்றப்பட்டது. 

அக்கடிதத்தில், நண்பர்களிடம் ஆன்லைன் ரம்மி விளையாட பணம் வாங்கி இருந்ததாகவும், அதனை இழந்து கடனை அடைக்க முடியாத காரணத்தால் விபரீத முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். காவல் துறையினரின் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் பின்வருமாறு., 

Coimbatore

சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ.1 இலட்சம் சம்பளத்திற்கு வேலைபார்த்து வந்த சங்கர், ஆன்லைனில் ரம்மி கேம் விளையாட தொடங்கி இருக்கிறார். அவருக்கு தொடக்கத்தில் வருமானம் வரவே, கையில் இருந்த பணத்தை வைத்து விளையாடி இருக்கிறார். 

சில இலட்சங்கள் வந்ததும் தனது வேலையை காண்பித்த ரம்மி செயலியால் பணம் கிடைக்காமல் போக, விட்டதை மீட்கிறேன் என நண்பர்களிடம் ரூ.10 இலட்சம் வரை கடன் வாங்கி, அதனையும் இழந்துள்ளார். இதனால் சென்னையில் இருந்து கோவை வந்தவர் மீண்டும் பணத்தை மீட்க முயற்சித்து தோல்வியை சந்தித்துள்ளார். 

இதன்பின்னர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பே கேரளாவுக்கு சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். அதன்பின், கடந்த வாரத்தில் ஊட்டியில் வைத்து எடுத்த தற்கொலை முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது. இரண்டு முறை இறுதிக்கட்டத்தில் உயிர் பயத்தால் தற்கொலை முயற்சியை கைவிட்ட சங்கர், கோவையில் தனது உயிரை இழந்துள்ளார்.