
துண்டிக்கப்பட்ட உள்ளங்கையை இணைத்த கோவை மருத்துவர்கள்.. ஒடிசா இளைஞருக்கு மறுவாழ்வளித்து சாதனை.!!
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் கணேஷ் (வயது 21). இவர் திருப்பூரில் தங்கியிருந்து பணியாற்றி வருகிறார். அப்போது, அவரின் வலது உள்ளங்கை அரிவாளால் வெட்டி துண்டிக்கப்பட்ட நிலையில், கடந்த 8 ஆம் தேதி சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில், துண்டிக்கப்பட்ட கையை மருத்துவர்கள் பாதுகாத்து வைத்தனர். அதனை மீண்டும் பொருத்தவும் முயற்சியெடுத்தனர். இதனையடுத்து, மருத்துவமனை மருத்துவர் வ.பி ரமணன், ஆர். செந்தில்குமார், எஸ். பிரகாஷ், ஏ. கவிதா பிரியா உட்பட பலரின் தலைமையில் அறுவை சிகிச்சை நடந்தது.
6 மணிநேரத்திற்கு மேல் நடைபெற்ற அறுவை சிகிச்சையின் முடிவில் கணேஷின் துண்டிக்கப்பட்ட உள்ளங்கை இணைக்கப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து 20 நாட்கள் தொடர் கவனிப்புக்கு பின்னர், கை செயல்பட தொடங்கியுள்ளது.
Advertisement
Advertisement