காதலியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த பிரபல பைக் ரேசர் கைது; கோவை காவல்துறை அதிரடி.!

கேரளாவை சேர்ந்த பைக் ரேசர், தேசிய அளவிலான பைக் ரேஸிங் சாம்பியன் அல்டின் பாபு, கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் தனது காதலியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதாக பெறப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த காதல் ஜோடி தற்போது தொடர்பில் இல்லை. இந்நிலையில், பிரிவின் காரணமாக ஆத்திரமடைந்த பாபு, காதலியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.