தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
உன் பொண்டாட்டி நல்லவ இல்லை, எனக்கு 2 நாள் அனுப்பி வை - காட்டுக்குள் கல்லைப்போட்டு நடந்த பரபரப்பு கொலை.!
மதுபோதையில் நண்பன் தனது நண்பனின் மனைவியை 2 நாட்கள் அனுப்பி வை என்று கூறவே, ஆத்திரமடைந்தவர் நண்பரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர், உருமாண்டகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (வயது 65). இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று காலை நேரத்தில், நடராஜின் உடலில் பலத்த காயத்துடன் பிணமாக மீட்கப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், நடராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரின் உடல் அருகே மதுபானம் மற்றும் குளிர்பானம் போன்றவை இருந்த நிலையில், மதுபோதையில் நடராஜை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வந்தது.
விசாரணையில், நடராஜ் தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் குருசாமி என்பவருடன் மதுபானம் அருந்த சென்றது உறுதியான நிலையில், அவர் வடுகம்பாளையம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். முதலில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த குருசாமி, பின்னர் நான் தான் நடராஜின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தேன் என குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
அவரின் வாக்குமூலத்தில், "நடராஜனின் வீட்டருகே நான் வசித்து வருகிறேன். இருவரும் பல வருடமாக நண்பர்களாக இருக்கிறோம். பொங்கல் நாளில் வெளியே சென்று மதுபானம் குடிக்க சென்ற நிலையில், இருவரும் பச்சாம்பாளையம் பகுதியில் மதுபானம் வாங்கி, சென்னியப்ப கவுண்டன் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றோம்.
இருவரும் மதுபானம் அருந்திய நிலையில், நானும் - நடராஜும் தொடர்ந்து குடித்துக்கொண்டு இருந்தோம். அப்போது, நடராஜ் என்னிடம் உன் மனைவியின் நடத்தை சரியில்லை. அவளை என்னுடன் 2 நாட்கள் அனுப்பி வை. 2 நாட்கள் அவளுடன் இருந்துவிட்டு வீட்டுக்கு அனுப்புகிறேன் என்று கூறினார். இதனால் எனக்கு கோபம் வந்து, தகறாராகி ஒருவரையொருவர் தாக்கினோம்.
ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற நான் அருகே இருந்த கல்லை எடுத்து நடராஜின் தலையில் போட்டு கொலை செய்தேன். சம்பவ இடத்திலேயே நடராஜ் உயிரிழந்துவிட, நான் எதுவும் நடக்காதது போல சரக்கடித்துவிட்டு சுற்றி வந்தேன். காவல் துறையினர் என்னை கைதுசெய்துவிட்டனர்" என்று தெரிவித்தார். விசாரணைக்கு பின்னர் குருசாமி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.