டிஜிட்டல் அரசியலில் ராகுல் காந்தியைப் பின்னுக்குத் தள்ளிய முதல்வர் விஜய்...! புதிய சாதனையால் கொடிகட்டி பறக்கும் தவெக....!!!



cm-vijay-instagram-followers-surpass-rahul-gandhi

சமூக வலைதளங்கள் அரசியல் தொடர்பு மற்றும் மக்களைச் சென்றடையும் முக்கிய தளமாக மாறியுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் இன்ஸ்டாகிராமில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவர் முந்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை

தற்போதைய தகவலின்படி, இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்தபடியாக எதிர்க்கட்சி தலைவர்களில் முன்னணியில் இருந்த ராகுல் காந்திக்கு 1.47 கோடி பின்தொடர்பாளர்கள் உள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் 1.87 கோடி பின்தொடர்பாளர்களுடன் அந்த எண்ணிக்கையை கடந்துள்ளார். இதன் மூலம் சமூக வலைதளங்களில் தனது செல்வாக்கை மேலும் வலுப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: BREAKING : அதிரடி அரசியல்... தவெக-வுக்கு முதல் வெற்றி.!

டிஜிட்டல் தளங்களில் தவெக கவனம்

தமிழகத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சுமார் 23 லட்சம் பேர் பின்தொடர்ந்து வரும் நிலையில், டிஜிட்டல் தளங்களில் விஜய் முன்னணி இடத்தைப் பிடித்திருப்பதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்கள் மூலம் அரசியல் கருத்துகள் மற்றும் அரசின் திட்டங்கள் அதிகளவில் மக்களை சென்றடையும் சூழல் உருவாகியுள்ளது.

கட்சி நிர்வாகிகளின் தீவிர பிரசாரம்

Instagram உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அரசின் திட்டங்கள் மற்றும் கட்சியின் கொள்கைகளை ரீல்ஸ், வீடியோக்கள் மற்றும் பதிவுகள் மூலம் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். ராகுல் காந்தியை பின்தொடர்பாளர்கள் எண்ணிக்கையில் விஜய் முந்தியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், தவெக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: BREAKING : அப்படி இப்படின்னு ஆதரவு கட்சிகளை திரட்டி... ஆளுநரை சந்தித்த விஜய்! அரங்கேரிய அரசியல் களத்தின் "க்ளைமாக்ஸ்" காட்சி...!!!