அரசு விழாவில் பதிவான அழகான தருணங்கள்! CM விஜய்யை கட்டிஅணைத்து, கைகுலுக்கி, ரசிகர்களுக்காக 'மாஸ்டர்' பாணியில் பஞ்ச் செய்த CM...! தினம் தினம் மக்களை மகிழ்விக்கும் தவெக அரசு..!!!



cm-vijay-government-event-fan-moments-go-viral

சென்னையில் நடைபெற்ற தமிழக அரசின் நலத்திட்ட விழாவில் முதலமைச்சர் விஜயுடன் பயனாளிகள் மற்றும் புதிதாக பணி நியமனம் பெற்றவர்கள் உற்சாகமாக கலந்துரையாடிய தருணங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. நிகழ்ச்சியின் போது அரங்கேறிய சில காட்சிகள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன.

மருத்துவக் கட்டடங்கள் திறப்பு; பணி நியமன ஆணைகள் வழங்கல்

சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் சுமார் 139 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவக் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். தொடர்ந்து 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இதையடுத்து மேடைக்கு வந்த பலரும் முதலமைச்சருடன் நினைவுப் புகைப்படம் எடுக்கவும், கைகுலுக்கவும் ஆர்வம் காட்டினர்.

இதையும் படிங்க: முகம் முழுக்க சிரிப்பு! செங்கோட்டையன் பதவி ஏற்க வந்ததும் எழுந்து நின்ற விஜய், ராகுல் காந்தி! நெகிழ்ச்சி வீடியோ..!!!

மேடையில் ரசிகர்களின் உற்சாகம்

விழாவில் பங்கேற்ற சிலர் முதலமைச்சர் விஜயைக் கட்டியணைக்கவும், ஆட்டோகிராஃப் பெறவும், செல்ஃபி எடுக்கவும் விருப்பம் தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கைகளுக்கு விஜய் இன்முகத்துடன் பதிலளித்ததாக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். மேலும், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க 'மாஸ்டர்' திரைப்படத்தை நினைவூட்டும் வகையில் கை சைகை காட்டியதுடன், அரங்கில் இருந்த குடும்பத்தினரை நோக்கி கையசைத்த காட்சிகளும் கவனம் பெற்றன.

முதலமைச்சர் விஜய் தொடர்பான காட்சிகள் வைரல்

அரசு விழாவில் பதிவான இந்த தருணங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. பொதுமக்களுடன் இயல்பாக பழகிய முதலமைச்சர் விஜயின் அணுகுமுறையை பலரும் பாராட்டி பதிவிட்டு வரும் நிலையில், நிகழ்ச்சியின் வீடியோக்கள் இணையத்தில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன.

 

இதையும் படிங்க: ரிப்பன் வெட்டுதல் முதல் குத்துவிளக்கு ஏற்றுதல் வரை வெடித்த மோதல்! மேயர் பிரியா செய்த சதியால் தவெக பெண் எம்எல்ஏ பல்லவி குற்றச்சாட்டு...!!!