பல எதிர்ப்புகளை தகர்த்து இன்று கரூர் செல்லும் CM விஜய்! கரூர் பயணத்தில் ஒளிந்திருக்கும் ரகசியம்? அதிர வைத்த விஜய்யின் முடிவு.!!!
தமிழக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு தனது முதல் அதிகாரப்பூர்வ மாவட்டப் பயணத்தை மேற்கொள்கிறார். கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதுடன், பல்வேறு அரசு நலத்திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல்
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் கரூர் செல்வது இதுவே முதல்முறையாகும். பயணத்தின் போது கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதோடு, அவர்களுக்குக் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளார்.
இதையும் படிங்க: BREAKING: திடீர் திருப்பம்! விஜய்யின் மாஸ்டர் பிளான்! டெல்லி பயணத்தில் அதிகரிக்கும் பரபரப்பு!!!
அரசு திட்டங்களுக்கு அடிக்கல்
மதியத்திற்கு பிறகு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ளும் முதலமைச்சர், பல்வேறு புதிய மக்கள் நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, புதிய அரசு திட்டங்கள் தொடர்பான பணிகளை தொடங்கி வைக்கிறார். மாவட்ட வளர்ச்சியை முன்னிட்டு பல்வேறு அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முழு பயணத் திட்டம்
காலை 9 மணியளவில் சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்படும் முதலமைச்சர், மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூரை அடைந்து நண்பகலில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்ட பிறகு, மாலை திருச்சி விமான நிலையம் வழியாக சென்னை திரும்புகிறார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் சென்னை மற்றும் திருச்சியைத் தாண்டி மேற்கொள்ளும் முதல் மாவட்டப் பயணமாக இது அமைந்துள்ளதால், அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: BREAKING: கரூர் கூட்ட நெரிசலில் இழந்த 41 பேரின் குடும்பகளுக்கும் அரசு பணி.! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு.!!!