அரசியல் தமிழகம்

வீடியோ: கண்கலங்கினார் ஸ்டாலின்!! கோபாலபுரம் இல்லத்தில் தந்தையின் புகைப்படத்தை பார்த்து கண்கலங்கிய முதல்வர்.. வைரல் வீடியோ!!

Summary:

தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றபிறகு கோபாலபுரத்தில் உள்ள தனது தந்தையின் புகைப்படத்திற்க

தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றபிறகு கோபாலபுரத்தில் உள்ள தனது தந்தையின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய பிறகு கண்கலங்கினார்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றிபெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி அமைகிறது. திமுக சார்பில் 125 பேரும், 8 பேர் உதயசூரியன் சினத்திலும், கூட்டணிக்கட்சிகளின் வெற்றி என 159 இடங்களில் என திமுக கூட்டணி மகத்தான வெற்றிபெற்றது.

இதனை அடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஸ்டாலின் ஆளுநரிடம் உரிமை கோரியிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுதத்தை அடுத்து, இன்று காலை 9 மணிக்கு தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். ஆளுநர் பன்வாரிலால் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பு நிகழ்ச்சிக்கு முடிந்ததும் சென்னை கோபாலாபுரத்தில் உள்ள தனது தந்தையும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் அவர்களின் இல்லத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், வீட்டில் வைக்கப்பட்டிருந்த தனது தந்தையின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் தனது தந்தையின் புகைப்படத்தை பார்த்து ஸ்டாலின் கண் கலங்கினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement