தமிழகம்

#Breaking விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! முதலமைச்சர் எடப்பாடி அதிரடி அறிவிப்பு!

Summary:

Cm announcement for farmers

வியாபாரிகளுக்கு விளைபொருள்கள் கிடங்கு வாடகை கட்டணம், விவசாயிகளுக்கு விவசாயிகள் கிடங்கு வாடகை கட்டணம் இதற்கு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் 24,942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில், வியாபாரிகளுக்கு விளைபொருள்கள் கிடங்கு வாடகை கட்டணம் இதற்கு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு. விவசாயிகளுக்கு விவசாயிகள் கிடங்கு வாடகை கட்டணத்தை மேலும் ஒரு மாதம் செலுத்த தேவையில்லை என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

 மேலும், பொருளீட்டு கடனுக்கான 5% வட்டியையும் மேலும் ஒரு மாதம் செலுத்த தேவையில்லை எனவும் கூறியுள்ளார். குளிர்பதனக் கிடங்குகளில், காய்கறி பழங்களை பாதுகாக்க மேலும் ஒரு மாதம் கட்டணம் செலுத்த தேவையில்லை எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


Advertisement