மின் கேபிளில் ஏற்பட்ட மின் கசிவால் மின்சாரம் பாய்ந்து தூய்மை பணியாளர் பலி...

மின் கேபிளில் ஏற்பட்ட மின் கசிவால் மின்சாரம் பாய்ந்து தூய்மை பணியாளர் பலி...


Cleaner person death by electric shock

சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் சேகர்‌. இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு சென்று வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது வேளச்சேரி வெங்கடேஷ்வரா நகர் 3 வயது பிரதான சாலையில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது பூமிக்கு அடியில் புதைப்படிருந்த மின் கேபிளில் ஏற்பட்ட மின் கசிவால் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார்‌.

death

அங்கிருந்தவர்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதனையடுத்து வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சேகர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.