8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 11ம் வகுப்பு சிறுவன் ஷாக் செயல்.. இறுதியில் தற்கொலை முயற்சி.!
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுவன் விசாரணையில் வைக்கப்பட்டுள்ளார்.
8 வயது சிறுமி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை வட்டாரத்தில் உள்ள கிராமத்தில் 8 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவியை வீட்டுக்கு அழைத்து பாதிரியாரின் பகீர் செயல்.. போக்ஸோவில் தூக்கிய காவல்துறை.!
11ம் வகுப்பு சிறுவன்:
இதே கிராமத்தில் வசித்து வரும் 11ம் வகுப்பு மாணவரான 16 வயது சிறுவன், சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
தற்கொலை முயற்சி:
இதனிடையே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன், விஷயம் வெளியே தெரிந்ததை அறிந்துகொண்டு துணியால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த எலவனாசூர்கோட்டை காவல்துறையினர், சிறுவனை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். மேலும், சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 16 வயது சிறுவன் அதிர்ச்சி செயல்.. தமிழகத்தில் ஷாக்.!